அம்மாடியோ ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினாவின் சம்பளம்… எவ்வளவு தெரியுமா….???

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.முதலில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வார பிக் பாஸ் நாமினேஷனில் இடம்பெற்று இருந்த சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

 

அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பெண்களிடம் பல சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கிய அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனைப் போலவே இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற செரீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.இவர் ஒரு மாடல் என்பதை பலரும் அறிந்திருப்போம்.

 

இந்நிலையில் செரினா பிக் பாஸ் வீட்டில் 28 நாட்கள் இருந்துள்ளார்.இருந்த அத்தனை நாட்களும் அவர் மக்களை கவர சரியான விஷயங்களை செய்யவில்லை.இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவதற்கு ஒரு நாள் சம்பளமாக 23 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.