என்னது இவங்க 2 பேரும் நிஜத்திலும் அக்கா தங்கையா?…. அதுவும் பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி….. இத்தன நாள் இது தெரியாம போச்சே….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின். இவருடைய பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றியை படைத்தது.

அந்தத் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பள்ளி மாணவிகளை பிரசன்னா கடத்துவார். அந்தப் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர்கள் இருவரும் அக்கா தங்கைகள் தான். தற்போது அவர்கள் இருவருமே நடிகைகளாக உள்ளனர்.அதாவது அட்டகத்தி திரைப்படத்தில் நதியா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண்கள் நடித்து இருப்பார்கள்.

அதில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை அஞ்சாதே திரைப்படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணி தான்.அதனைப் போலவே நதியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபியாவின் உடன் பிறந்த அக்கா. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மனைவிதான் அட்டகத்தி திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா.

இவர் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அதேசமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படத்தில் நடன ஆசிரியராக நடித்துள்ளார்.இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் உடல் நலப் பிரச்சினை காரணமாக பாதியில் விலகினார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.