தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

அதன் பிறகு சினேகாவின் உடல் எடை அதிகரித்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து சினேகா தனது உடல் எடையை கடினமாக ஒர்க்அவுட் செய்து குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த சினேகாவின் ரசிகர்கள் நம்ம புன்னகை அரசி சினேகாவா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
