ரத்தத்தில் அழகு சிகிச்சை….. வேற லெவலில் மாறிய பிக்பாஸ் புகழ் ஜூலி…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க….!!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார்.

இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வருகிறார். அதனைப் போலவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி ரத்தத்தின் மூலம் அழகு சிகிச்சை செய்திருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்துள்ளது. பொதுவாக நடிகைகள் அனைவரும் அழகு சிகிச்சைகள் செய்து கொள்வது வழக்கம்தான். அழகு சிகிச்சையின் மூலம் எப்போதும் இளமையாக இருப்பது மற்றும் முகவெட்டு தோற்றத்தை மாற்றிக் கொள்வது என பல வகையான மேஜிக்குகளை நடத்த முடிகிறது.

அவ்வகையில் தற்போது பிக் பாஸ் ஜூலி இணைந்துள்ளார். அவர் அழகு சிகிச்சை எவ்வாறு நடந்தது என்பது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Julie இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mariajuliana_official)