கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லை, ஈரானிய படமான பிஸ் அண்ட் கேட் படம் தான் முதல் நான் லீனியர் படம் என்ற ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பினார். அதற்கு பார்த்திபன் விளக்கம் அளிக்க இந்த பிரச்சனை பெரிதானது.

இந்நிலையில்,எனது படத்தை பாராட்டி பேச வேண்டும் என்றால் 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியதாக தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார் என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு ட்விட்டரை எடுத்து போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இது சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.