சார்பட்டா இயக்குனர் பா. ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம்…. இன்று ட்ரெய்லர் வெளியீடு….!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் உருவான சர்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதனைத் தொடர்ந்து அழகிய காதல் கதையை மையமாகக் கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் ஒரு பெண் தலைவிரி கோலமாய் இருப்பது போலவும், கதாபாத்திரங்கள் அதில் இருப்பது போன்று போஸ்டர்கள் வெளியாகின.

தென்மா இசையமைப்பில் ரஞ்சித்தின் இசை கூட்டணியான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம். துஷாரா விஜயன் ஆகியோர்.பா ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான சர்பட்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.