புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இந்நிலையில் கல்லூரியின் ஆண்டு விழா தொடங்கி உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மேடை ஏறிய மாவட்ட ஆட்சியர் “யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே” என்ற பாடலுக்கு பரதநாட்டிய நடனம் ஆடினார்.

இதனைக் கண்ட கல்லூரி மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். பரதநாட்டியத்தை முறையாக கற்றுள்ள ஆட்சியர் கவிதா ராமு ஏராளமான அரங்கேற்றகளை இதுவரை செய்துள்ளார். இந்நிலையில் அவர் கல்லூரியில் ஆடிய பரதநாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.