“என் வீட்டுக்கு வா”…. வீட்டை சுத்தி காட்டுறேன்…. இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பிரபல பாடகர்…. பரபரப்பு புகார்….!!!!

பாலிவுட்டில் முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளராக திகழ்பவர் ராகுல் ஜெயின். பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இவர் மீது 30 வயது ஸ்டைலிஸ்ட் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ராகுல் ஜெயின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் கூறுகையில், இன்ஸ்டாகிராம் மூலமாக ராகுல் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனது வேலையை வெகுவாக பாராட்டி அந்தேரி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு கூறினார். அவரின் பர்சனல் ஸ்டைலிஸ்டாக என்னை நியமிப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வீட்டிற்கு அழைத்த நிலையில் நான் அவரது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்று கூறியதுடன் தனது உடைகளை காட்டுவதாக கூறி படுக்கையறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, அந்தப் பெண்ணை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் தெரிவித்துள்ள புகார் முற்றிலும் பொய் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதற்கு முன்பும் கூட ஒரு பெண் என் மீது இதே போன்ற புகாரை அளித்தார்.

ஆனால் அந்தப் புகாரில் எனக்கு நீதி கிடைத்து விட்டது. தற்போது புகார் அளித்துள்ள இந்த பெண் அவரின் கூட்டாளியாக இருக்கலாம் என்று ராகுல் ஜெயின் தெரிவித்துள்ளார். இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பிரபல பாடகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.