நடிக்க வருவதற்கு முன்பே திரிஷா இப்படியா?…. பலருக்கும் தெரியாத உண்மை தகவல்…. லீக்கான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இதனைத் தவிர இவர் நடித்துள்ள ராங்கி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளது. இந்நிலையில் 39 வயதாகியும் தற்போது வரை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனிடையே 40 வயத நெருங்கிக் கொண்டிருக்கும் திரிஷா இன்னும் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன்பே 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். அது குறித்த தகவலை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜெயம் ரவி கூறி இருந்தார்.இதனிடையே நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது