தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளையடிப்பவர் நடிகை திரிஷா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிதளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா ஏற்று நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை திரிஷா சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த புகைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்து வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக மிக சிறிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
