தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுவரை ராகவா லாரன்ஸ் எந்த ஒரு படத்திலும் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து நடித்ததே இல்லை.

ஆனால் தற்போது முதன்முறையாக இயக்குனர் வாசி இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக இப்படி மாறி உள்ளார். சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.

இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவரின் அறக்கட்டளைக்கு பலரும் டொனேஷன் கொடுத்து வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது இனிமேல் தனது அறக்கட்டளைக்கு யாரும் டொனேஷன் பணம் அனுப்ப வேண்டாம் என்று அவர் ட்விட்டரில் போட்டு உள்ளார். இறைவன் அருளால் தான் தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதால் தனது சொந்த செலவிலேயே தனது பிள்ளைகளை பாதுகாக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.