எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க…. நான் தப்பு பண்ணிட்டேன்…. கை கூப்பி மன்னிப்பு கேட்ட அசல் கோளாறு….!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது மூன்று வாரங்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறினார்.இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரே நேரத்தில் டிவி மற்றும் ஓடிடியின் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத பல முகமறியாத போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவ்வாறு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அசல் கோளாறு.  இவர் ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என பல சர்ச்சை கிளப்பும் விஷயங்களில் ஈடுபட்டு வந்தார். ஒரு சில பெண் போட்டியாளர்களிடம் திமிராக பேசுவதும் குயின்ஸ் மற்றும் நிவாசினி போன்ற போட்டியாளர்களிடம் வழிந்து வழிந்து பேசுவதும் என இவர் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

முதலில் குயின்சி இடம் நெருங்கி பழகி வந்த அசல் அதன் பிறகு நிவாஷினியிடம் கடலை போட ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் அவரிடம் நீச்சல் குளம் அருகில் படுத்துக்கொண்டு கடலை போடுவது, மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை தடவுவது போன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.இதனிடையே அவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெண்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டது தான். இந்நிலையில்  அவர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.