சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல 80-ஸ் நடிகை…. யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு குஷியான செய்தி….!!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைகிறார். இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் மஹாவீருடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் 80களில் கலக்கிய பிரபல நடிகை சரிதா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 80களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சரிதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் இவர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சிலோன்.

இந்நிலையில் நடிப்பில் இடைவெளி விட்ட இவர் 9 வருடங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.