தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தேசிய விருதை தட்டி தூக்கியது. இவர் தொடர்ந்து நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் 42வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் நாயகி உட்பட இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக இவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமாகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் ஐந்தாவது முறை சூர்யாவுடன் தேவி ஸ்ரீ பிரசாந்த் கூட்டணி அமைக்கிறார்.