அண்ணாத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இதனை ரஜினியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் போலீஸ் ஸ்டேஷன் போன்று போடப்பட்ட செட்டில் ஒரு படபிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகர் விநாயகம் இணைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் விநாயகம் ஏற்கனவே தமிழில் விஷால் நடித்த திமிரு, சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் மற்றும் கார்த்தி நடித்த சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர்.ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
