தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்பு பிணைப்பை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது கையில் உள்ள டாட்டூ குறித்து முதல் முறையாக நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, “என் கையில் உள்ளது போல டாட்டூ வரைந்திருக்கும் என் ரசிகர்களை நான் கவனித்துள்ளேன். நான் வரைந்திருக்கும் டாட்டூவில் என் திருமண நாள் இருக்கின்றது. அதனை வேறு யாரும் டாட்டூவாக வரைய வேண்டாம். சில விஷயங்கள் மாறலாம். நானே இதனை மாற்றலாம்.
அதனால் ரசிகர்கள் யாராவது டாட்டூ போட விரும்பினால் என் கையில் உள்ளது போல போட வேண்டாம் என்று கூறினார். மேலும் கையில் இருக்கும் டாட்டூவை மாற்ற போகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படி ஏதும் எண்ணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram