முதல் நாள் சூட்டிங்கே வேற லெவல்…. சிவகார்த்திகேயனுடன் இணைந்த அதிதி சங்கர்…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதீசங்கர் நடிக்கிறார்.

தற்போது மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.