10th முடித்தவர்களுக்கு….. தெற்கு ரயில்வேயில் சூப்பரான வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

ரயில்வே துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறை  வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தலா 2 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Wireman பணிக்கு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, Computer Operator And Programming Assistant பணிக்கு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

உதவித்தொகை :
Wireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை உதவித்தொகையாக பெறுவார்கள்.
Computer Operator And Programming Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

தேர்வு முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த ரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d941a7fd254fc84e7b62

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d7c5a7fd254eb965080c