ரொம்ப ஓவரா போறீங்க…. “இப்பவே இந்த சீன் ஆகாது”…. சிவாங்கி செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார்.

இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று துபாய்க்கு சிவாங்கியை அழைத்துச் சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற அழைப்பு விடுத்திருந்தது.அதற்காக சிவாங்கிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கு சிவாங்கி எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் மட்டும்தான் நான் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.

அதனால் செய்வதறியாது அந்த தனியார் நிறுவனம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்தது. இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, தற்போது தான் வளர்ந்து வரும் பிரபலமாக உள்ள சிவாங்கி இப்பவே இவருக்கு இவ்வளவு சீன் எல்லாம் ஆகவே ஆகாது என விமர்சித்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரை பங்குபெற செய்து அவரின் முகத்தை அடிக்கடி காட்டி பிரபலப்படுத்தி வந்ததால் இப்படி எல்லாம் இவர் ஓவராக நடந்து கொள்கிறார் எனவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.