வருங்கால கணவருடன் ஜெய்ப்பூர் புறப்பட்ட ஹன்சிகா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வந்த இவர் விஜய் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளன.

 

இதனிடையே நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல் ஒன்று வெளியானது.அது குறித்து ஹன்சிகா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் நான்காம் தேதி அவரின் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.

ஹன்சிகாவின் நீண்ட கால நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான sohail kathuria என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் ஹன்சிகா  தனது வருங்கால கணவருடன் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.