இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவி மகளை பார்த்துள்ளீர்களா?…. இதுவரை பலரும் பார்த்திடாத அழகிய புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் கிங் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது கே எஸ் ரவிக்குமார் தான். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய நாட்டாமை,முத்து, நட்புக்காக, படையப்பா, சூரியவம்சம், வரலாறு மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார். குறிப்பாக சேரன் பாண்டியன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இயக்குனராக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரின் இயக்கத்தில் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது என்று செய்தி வெளியானால் ரசிகர்கள் மிகவும் குஷி அடைந்து விடுவார்கள்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இப்படி பல புகழுக்குரிய இவர் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.