தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவர் தற்போது வம்ச இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் யோகி பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் எண்ணூர் பகுதியில் வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த விஜயின் ரசிகர்கள் அங்கு விஜயை காண குவிந்தனர். அப்போது மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதனை கண்டதும் ரசிகர்கள் அனைவரும் வானமிடிந்து விடும் அளவிற்கு கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.