அம்மாடியோ இத்தனை கோடியா?…. 12 வருடங்களில் சமந்தா சேர்த்த சொத்து மதிப்பு…. கேட்டா தலைய சுத்துது….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகமான சமந்தா தற்போது பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட 12 வருடங்களாக முன்னணி நடிகைகளின் ஒருவராக இருக்கும் சமந்தா இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி கடந்த 12 வருடங்களில் 100 கோடி வரை சமந்தா சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.