“இவரை தான் தேடிட்டு இருக்கேன்”…. தெரிஞ்சா யாராவது சொல்லுங்க…. இசையமைப்பாளர் இமான் வெளியிட்ட வீடியோ….!!!!

தமிழ், கன்னட, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய சினிமாக்களில் டாப் இசை அமைப்பாளராக வலம் வறுபவர் டி இமான். விஜயின் தமிழ் படம் மூலம் அறிமுகமான டி இமான் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரயிலில் ஒரு பெண் பாட்டு பாடும் வீடியோ ட்விட்டரில் வைரலானது. அந்தப் பெண்ணின் குரல் மிக இனிமையாக இருப்பதாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வைரலான அந்தப் பெண் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றும் அவரை தான் பாட வைக்கப் போவதாகவும் இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

அதனால் அந்தப் பெண் பற்றிய விவரங்கள் தெரிந்தால் யாராவது கொடுங்கள் என்றும் அவர் கேட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.