“ஆளே அடையாளம் தெரியல…. இப்படி மாறீட்டாங்களே”…. வேற லெவல் லுக்கிங் சார்பட்டா நாயகி…..!!!!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதலின் பல்வேறு கோணத்தை இந்த படத்தில் எடுத்துரைத்துள்ளனர்.தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

சார்பட்டா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை துஷாரா விஜயன்.  இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார். அந்தத் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைத் தேடிக் கொடுத்தன.

தற்போது பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் துஷாரா முற்றிலும் வேறு மாதிரியான தோற்றத்தில் நடித்துள்ளார் .படத்தில் அவரது தோற்றத்திற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.