“தமிழ்நாட்டில் எனக்கு இந்த ஊர் தான் ரொம்ப பிடிக்கும்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…. வைரல்….!!!!

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார்.

இவர் கடைசியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் என் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம்,திருச்சிற்றம்பலம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.

அவ்வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், “அசோக் நகரை தவிர தமிழ்நாட்டில் உங்களுக்கு எந்த ஊர் மிகவும் பிடிக்கும்? என கேட்டார். அதற்கு கன்னியாகுமரி மிகவும் பிடிக்கும் என பிரியா பவானி சங்கர் instagram பக்கத்தில் பதிலளித்துள்ளார்.