தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தற்போது செல்வராகவனுடம் இணைந்து பகாசூரன் திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் வெளியிட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அடுத்த நாள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் செல்வராகவன் குறித்து மோகன் ஜி நெகிழ்ச்சியாக பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இயக்குனர் செல்வராகவன் ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை என்றும் படத்தில் சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என்று சொல்லியதாக மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும்,இயக்குனர் செல்வராகவன் சார் இயக்கிய காதல் கொண்டேன் என்ற திரைப்படம் பார்த்த பிறகு தான் சினிமா மீது எனக்கு அதிக மோகம் ஏற்பட்டது. நான் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் சார் அவர்களை மானசீக குருவாக நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் அந்த குருவையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று நான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

பகாசூரன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் முழுவதும் நினைவில் இருக்கும். செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன் என்று மோகன் ஜி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.