தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது இந்தியிலும் மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் டாப் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்து வருகின்றார். இவர் தற்போது யசோதா மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இனிமேல் புதிய படங்களில் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சமந்தா முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்தும் சற்று விலகி இருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகள் இருக்கக் கூடாது, முத்த காட்சிகளின் நடிக்க மாட்டேன், அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிப்பதாகவும் அது மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் சமந்தா முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.