பத்து தல படத்தில்….. சிம்புக்கு மிரட்டல் வில்லனாகும் முக்கிய பிரபலம்….. இயக்குனர் வெளியிட்ட அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கர்நாடகா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மெகா ஹிட் ஆன முப்தி படத்தின் ரீமேக் ஆக உருவாக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தில் மாற்றங்கள் செய்திருப்பதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10 தல திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக அவர் கூறியுள்ளார். படத்தில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் மோதும் காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. இதற்காக செட் தயாராகி வருவதாகவும் விரைவில் முடிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.