பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரா?…. போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….. யாரா இருக்கும்….???

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்த ஹீரோ ரவி கிருஷ்ணா நடித்துள்ளார். ஆனால் தற்போது வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அல்ல,2005 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ளார். அப்ப படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.