தமிழ் சினிமாவின் பிரபலமான டப்பிங் கலைஞரான தீபா வெங்கட்டை யாரும் மறக்க முடியாது. சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல் பல நடிகைகளுக்கும் பின்னணி குரலாக ஒழித்துக் கொண்டிருப்பவர் நடிகை மற்றும் ஆர்ஜே வான தீபா வெங்கட்.இவர் முதன்முதலில் அஜித் நடித்த பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதேசமயம் தொலைக்காட்சி தொடர்களிலும் பிசியாக கடித்து வருகிறார். குறிப்பாக தேவயானியின் தோழியாக கோலங்கள் நாடகத்தில் நடித்த உஷா கதாபாத்திரத்தை கட்டாயம் யாராலும் எப்போதும் மறக்கவே முடியாது. திரைப்படம் மற்றும் சீரியல் நாயகி,தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என பல்வேறு துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் தமிழகத்தில் கலைமாமணி விருது மற்றும் டப்பிங்கிற்க்காக இரண்டு விருது என பல அங்கீகாரத்திற்கு சொந்தக்காரி இவர்தான். 2000ஆம் ஆண்டிலிருந்து தேவயானி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார். அடுத்த வாரம் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திற்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனிடையே இவர் ஐடி துறையில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே தீபா தனது திருமண நாளில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
