நடிகர் கஞ்சா கறுப்புக்கு இப்படி ஒரு நிலையா?…. குடும்பத்துடன் வாடகை வீட்டில்…. மாத வாடகை மட்டும் இவ்வளவா….????

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் கஞ்சா கருப்பு. இவரின் உண்மையான பெயர் கருப்பு ராஜா.மதுரையை சேர்ந்த இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்த பிதாமகன் என்ற திரைப்படத்தில் கஞ்சா விற்பவராக நடித்திருந்தார். அதன் பிறகு இவரை அனைவரும் கஞ்சா கருப்பு என அழைத்ததால் இன்று பலராலும் கஞ்சா கருப்பு எனத்தான் அறியப்படுகிறார்.

இவர் ராம், தென்காசி, சண்டக்கோழி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் சினிமாவில் படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கினார். ஆனால் இவர் அதில் மொத்த பணத்தையும் இழந்து ஒன்றும் இல்லாதவராக ஆனார்.இவர் தயாரித்த வேல்முருகன் போர்வெல் என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது.

இதனால் மனமுடைந்த கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கஞ்சா கருப்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கண்ட கண்டவர்கள் எல்லாம் சென்னையில் சுற்றும்போது நான் சுற்ற கூடாதா? நான் சென்னையில் தான் தற்போது இருக்கிறேன்.

என்னுடைய பழைய வீடான பாலா அமீர் இல்லத்தை நான் கொடுத்துவிட்டேன். தற்போது மாதம் 30 ஆயிரம் ரூபாயில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறேன். என்னுடைய சொந்த வீடு போனாலும் நான் வாடகை வீட்டில் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். தற்போது நான் பல படங்களில் நடித்து வருவதால் எனக்கு ஒரு பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.