தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். ஆனால் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏற்கனவே அவருக்கு ஒரு காதல் இருந்துள்ளது.

அதாவது நாக சைதன்யாவிற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை சமந்தா காதலித்ததாக அவ்வபோது சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் வெளியாகின. பொது இடங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. அப்படி வெளியான புகைப்படம் தான் இருவரின் திருமணம்.

அதாவது இருவரும் ஒரு பூஜையில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகியதால் அது திருமணத்திற்கான பூஜை என்று பேசப்பட்டது. ஆனால் உண்மை என்னவோ அந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏதோ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகின்றது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.