விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகிறார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான்.

சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.அதன்படி சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் செல்போன் கடை திறப்பு ஒன்றுக்கு சென்று இருந்த குக் விட் கோமாளி புகழை ரசிகர்கள் சூழ்ந்ததால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது அதனைப் போலவே தேனியில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவாங்கி சென்றுள்ளார். அப்போது கடையை திறந்து வைத்ததோடு பாட்டுப்பாடியும் ஆட்டம் போட்டும் அதகளம் செய்தார். அதனால் சிவந்தியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது . அதன் காரணமாக அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிவாங்கிக்கு வந்த வாழ்வா இது என வாய் மேல் விரல் வைத்துள்ளனர்.