தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களின் ஒருவர்தான் உன்னி கிருஷ்ணன். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன்முதலாக பாடிய என்னவளே ஆதி என்னவளே என்ற பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது.1994-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர் தற்போது வரை பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனுக்கு தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த பிறகு சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ளது.பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வருபவர் தான் உன்னி கிருஷ்ணன்.

இதில் நடுவராக இருந்து வருகிறார். இதனிடையே பல புகழுக்குறிய பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணனும் பின்னணி பாடகி தான். இதனை பலரும் அறிந்திருப்போம். இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் தனது மனைவி பிரியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
