அடடே வனிதாவின் மகன் இவரா?…. இவரும் ஒரு ஹீரோ தான்…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து youtube சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் வனிதாவின் மகன் குறித்த தகவல் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வனிதாவின் மகன் தற்போது சினிமாவில் கால் தடம் பதிக்க உள்ளார். வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி தனது தாத்தா விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது நடிக்க உள்ளார். தற்போது ஸ்ரீஹரி சினிமாத்துறை சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே சிறு வயதாக இருக்கும் போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் கார்த்தியின் சிறு வயது கதாபாத்திரத்தில் விஜய் ஸ்ரீஹரி நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் தற்போது இவர் சினிமா துறை சம்பந்தமான படிப்பு படித்து வருவதாகவும் விரைவில் சினிமாவில் கால் பதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.