மீனாவின் பிறந்தநாள்…. ஹோட்டலில் தடபுடலாக விருந்து வைத்த பிரபல நடிகை…. மனம் நெகிழ்ந்த மீனா….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில் மீனா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திரையுலக தோழிகள் அதனை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Meena Sagar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meenasagar16)

அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் மிகுந்த உற்சாகத்தோடு மீனா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்நிலையில் மீனாவின் பிறந்தநாளுக்கு பிரபல நடிகை ராதிகா ரெஸ்டாரண்டுக்கு அவரை அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.