90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகர் ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இருட்டை குழந்தைகள் உள்ளனர். ஆனால் திடீர் மன கசப்பு காரணமாக 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இவர்களின் மகள் அருணாவிற்கு திருமணம் நடைபெற்றது.

அந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அந்த விழாவிற்கு வருகை தந்த ஜெயலலிதா அருணாவிற்கு விலை மதிப்பில்லா பரிசு ஒன்றை வழங்கியதாக நளினி கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த பரிசை விட தனக்கு பெரிய பரிசாக இருந்தது அவர் தனது சம்மந்திகளிடம் கூறிய வார்த்தை தான் என்றார்.

அதாவது நளினியின் சமந்தியை அழைத்து, நளினியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், அவள் மிகவும் ஸ்ட்ராங்கான பெண், நான் குழந்தைகளை வளர்க்க உதவி செய்கிறேன் என கூறியும் வேண்டாம் என மறுத்துவிட்டு தனியாக வளர்த்துக் காட்டியவள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அந்த வார்த்தைகளை தான் விலைமதிப்பில்லா பரிசாக எண்ணுகிறேன் என்று நளினி கூறியுள்ளார்.
