மீண்டும் களமிறங்கும் கோவை சரளா…. அதுவும் பிரபல நடிகருடன் காம்போ….. எந்த படத்தில் தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளன.தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருபவர் பலம்பெரும் நடிகை மனோரமா தான். அவருக்கு அடுத்த இடத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை தான் கோவை சரளா. இவர் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்திலுடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.

இவர்கள் மூன்று பேரின் காம்போவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு கோவை சரளா வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றது போல தனது பாணியை மாற்றிக் கொண்டு ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்விப்பார் கோவை சரளா.

குறிப்பாக விவேக் உடன் இணைந்து இவர் நடித்த சினேகிதியே என்ற காமெடி இன்றுவரை பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது.இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு செந்தில் மற்றும் கோவை சரளா காம்போ திரும்புவது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதன்படி சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் கிங் என்ற திரைப்படத்தில் செந்தில் மற்றும் கோவை சரளா காம்போ மீண்டும் அமைகிறது.

அந்தப் படத்தில் கோவை சரளா பையர்ஸ் புஷ்பாவாகவும் செந்தில் கேஷியோவாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில் தற்போது செந்தில் மற்றும் கோவை சரளா ரோல்கள் குறித்த போஸ்டர்களை பட குழு வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.