திருமணத்திற்கு முன்பு காதல்…. பிரபு பெயர் இருந்த அதே இடத்தில் புதிய டாட்டூ போட்ட நயன்தாரா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே அண்மையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாயில் சுற்றி வருகின்றனர்.நயன்தாராவின் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்கும் போது பிரபு என்று டாட்டூ போட்டு இருந்தார்.

அதன் பிறகு அதனை அழித்துவிட்டு தற்போது அதே இடத்தில் புது டாட்டூவை போட்டுள்ளார். Positivity என்று ஆங்கில எழுத்து சொல் தான் அந்த டேட்டுவில் இடம் பெற்றுள்ளது.அதனைப் போலவே கழுத்தின் பின்பகுதியில் ஒரு டேட்டு போட்டு உள்ளார் நயன்தாரா. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.