“மேகம் கருக்காதா கண்ணே கண்ணே”…. தனுஷின் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஸ்ரீதர் சோனா – மானசி…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதில் இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் பலரும் இன்று பிரபலங்களாக வளர்ந்து நிற்கின்றனர். பலருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்து வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் எட்டாவது சீசன் முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் மான்சி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அதில் தன்னுடைய குரலால் பலரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடனத்திலும் வல்லவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து மேகம் கருக்காதா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.அந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மான்சி சூப்பர் சிங்கர் சீசன் 8 வின்னர் ஸ்ரீதர் சோனாவுடன் இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.

https://youtu.be/F8eXgZlnPGs