தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி காஃபி வித் கரண் 7. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் வந்திருந்தார். அப்போது கரன் ஜோகர், நாகசைதன்யாவை கணவர் என்று ஆரம்பித்ததால் உடனே அதைக் கேட்ட சமந்தா கணவரா என்று கோபப்பட்டார்,

இதனை அடுத்து மன்னிப்பு கேட்ட கரண் முன்னாள் கணவர் என்று ஆரம்பித்தார். மேலும் நடிகர் நாக சைதன்யா இது போன்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உங்களுக்கு ஸ்கிரீனில் ஏற்ற ஜோடி என்றால் அதை யாரை கூறுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா மற்றும் சாய் பல்லவி என்று நாக சைதன்யா பதில் அளித்தார். அவரின் இந்த பதிலுக்கு அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
