நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார் .

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதன் பிறகு சென்னை திரும்பிய இருவரும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே இருவரும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது விக்கி மடியில் நயன்தாரா இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. மேலும் அதில் தொடர்ச்சியான வேலைகளுக்கு பின்னர் பார்சிலோனியாவில் சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இப்போது ஹனிமூன் 2.0 கொண்டாட ஸ்பெயின் செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.