ஸ்பெயின் நாட்டில் நயன் – விக்கி செய்த செயல்…. வேற லெவலில் வெளியான வீடியோ….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதன் பிறகு சென்னை திரும்பிய இருவரும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளனர். அதாவது நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் திடீரென்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்.இந்நிலையில் அங்கு இருவரும் நேரம் செலவிடுவதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனால் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இதனிடையே ஸ்பெயின் நாட்டில் நமது தாய் நாட்டின் தேசிய கொடியை பிடித்தபடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடந்து செல்லும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் ஏ ஆர் ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுடன் பதிவை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் அதில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)

அதுமட்டுமல்லாமல் விக்கி மிகவும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் பொதுவெளியில் நயன்தாராவுக்கு நச் என நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார்.அந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.