‘எப்பவுமே நாங்கள் இளம் ஜோடிதான்’ – நீச்சல் குளத்தில் நயன் – விக்கி, வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இயக்குநர் ஹரி இயக்கத்தில், சரத்குமார் ஜோடியாக, ‘ஐயா’ என்ற படத்தில் தான் நயன்தாரா அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கஜினி, சந்திரமுகி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையானார். அதன்பிறகு, கவர்ச்சி பாதையில் நயன்தாரா நடிக்க, ரசிகர்களின் முழு கவனமும் நயன்தாரா பக்கம் திரும்பியது. நயன்தாராவுக்கு என, ரசிகர் கூட்டமும் உருவானது.

முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்தார். ஏழு ஆண்டுகள் விக்கி – நயன் காதல் நீடித்த நிலையில், கடந்தாண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வாடகைத் தாய் மூலம், இரட்டை குழந்தைகளும் பெற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
எனினும் சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் நயன்தாரா, அடிக்கடி தனது காதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களையும் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார்.

சமீபத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக, அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில், நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், ‘ஜவான்’ படம் தியேட்டர்களில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், இப்போது நீச்சல் குளம் ஒன்றில் கணவர் விக்னேஷ் சிவனுடன், நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் காதலித்த போதிலும், கணவன் – மனைவியாக மாறி, இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான நிலையிலும், விக்கி – நயன் அன்பில், அன்னியோனியத்தில் இன்னும் காதல் சிறிதும் மறையவில்லை என, இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கமெண்டுகளை அள்ளித் தந்து வருகின்றனர். எப்பவும் நாங்கள் இளம்ஜோடி தான் என்பதை போல, புகைப்படத்தில் நெருக்கம் காட்டி அசத்தியிருக்கிறது இந்த நட்சத்திர தம்பதி.