யார் போனாலும் தனுஷுடன்…. எப்போதும் இருக்கும் ஒருவர் இவர் தான்….. அவங்க யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் பார்ட்டி மற்றும் அவுட்டிங் என இருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகி வருவதை நாம் பலரும் பார்த்திருப்போம். அண்மையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்த பிறகு,படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் அவுட்டிங் செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியானது.

அவ்வகையில் தற்போது தனுஷ் படங்களில் பல பாடல்களுக்கு நடனமாடும் குழுவில் இருக்கும் ஹேமா தாயால் என்பவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களில் இவர் நடனமாடியுள்ளார்.

இவர் தற்போது வீடியோ மூலம் அதனை வெளிப்படுத்தி இருக்கிறார். யார் இருக்காங்களோ இல்லையோ தனுசுடன் இவர் எப்போதும் இருப்பார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவிற்கு அவர் தோள் மீது கை போட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

HemaDayal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hemadayal18)