சற்று இயக்கத்தில் கலந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் மற்றும் விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.

இருந்தாலும் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சோவில் கவின் மீது காதல் கொண்ட சாக்ஸி அகர்வாலின் செயல்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் வெளியில் வந்த பிறகு மற்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு தற்போது கவர்ச்சி புயலாக மாறி தனது அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

பிக் பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்த இவர் சின்ட்ரல்லா படத்திற்காக வெகுவாக பாராட்டுகளை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஒன்பது திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே இவர் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விதவிதமான போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது உடைகளை அலங்கரிக்க பயன்படுத்தும் கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட உடை அணிந்து சூப்பர் கூல் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திணறடிக்க செய்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
Tried something new???? pic.twitter.com/9UzZ0qsWBN
— Sakshi Agarwal (@ssakshiagarwal) August 26, 2022