சுற்றுப்பயணம் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு…. இணையத்தில் வைரலாகும் செல்ஃபி புகைப்படம்….!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரமோஷன் பணிகள் ஒருபுறம் வேகமாக நடந்து வர மறுபக்கம் சென்னையில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும் அதில் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பேசினர்.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் கேரளச் சென்றுள்ள பொன்னியின் செல்வன் டீம், 22 ஆம் தேதி பெங்களூருக்கு செல்ல உள்ளது .அதன் பிறகு 23ஆம் தேதி ஹைதராபாத்திலும் 24 ஆம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ள பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இறுதியாக 26 ஆம் தேதி டெல்லியில் இவர்களின் சுற்றுப்பயணம் முடிகிறது.

இந்நிலையில் இன்று கேரளாவில் நடைபெற உள்ள ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் சென்றனர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர். அப்போது விமான பயணத்தின் போது இயக்குனர் மணிரத்தினம், ஜெயம் ரவி,கார்த்தி மற்றும் விக்ரமாக்கியவர் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.