தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியா அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே பிரம்மாண்டஸ் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியுள்ளார்.ஜெயலலிதா திரைப்படத்தில் நான் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாக நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று பிரியங்கா அருள் மோகன் படிப்படியாக கூறியுள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா அருள் மோகன் இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமான நிலையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.