பிரபல தமிழ் திரைப்பட நடிகர்…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி எம் குமார் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் ஆக வலம் வந்தவர் ஜி எம் குமார். இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபு ஹீரோவாக நடித்த அறுவடை நாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் ஆரம்ப வெற்றிக்கு பிறகு பிட்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவ்வாறு தற்போது வரை இருவருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஆரிய மற்றும் விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அவரின் நடிப்புக்கு சில விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது மருத்துவமனை புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் உடல் நலம் தேடி மீண்டும் வரவேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.